பனிக்கால  டிப்ஸ்...

பனிக்கால  டிப்ஸ்...

<  குளிரினால் உடல் சரியில்லாது போனாலோ அல்லது உடல் வலி இருந்தாலோ வெந்நீரில் எலுமிச்சைச்சாறு மற்றும் சிவப்பு மிளகு கலந்து பருக வேண்டும். இது உடல் வலியைப் போக்கி செரிமானத்தைச் சீர்படுத்தும்.

<  உணவில் முள்ளங்கி, வெந்தயம் போன்றவற்றை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

<  பனிக்காலங்களில் காலில் உளைச்சல் இருக்கும்போது தைலங்களை காலில் நேரடியாகத் தடவாமல் உள்ளங் காலில், அதாவது பாதத்தின் அடியில் அழுத்தித் தேய்த்தால் விர்ரென்று ஏறி வலி உடனே நின்றுவிடும்.

<  வெளியே குளிர் அதிகமாக இருக்கும்போது நமக்கு அதிகம் தாகம் ஏற்படாது. அதனால் உதடுகள் காய்ந்து  போவதில் நாம் அதிக கவனம் செலுத்தத் தவறிவிடுவோம். ஆனால் உடம்பின் நீரிழிப்பானது சில சமயங்களில் குளிர் காய்ச்சலுக்கு நம்மை இட்டும் சென்றுவிடும். இதனைத் தடுக்க குடுவைகளில் வெதுவெதுப்பான நீரினை நிரப்பி அதில் சீரகம் சிறிது கலந்து அருந்தி வரலாம்.

<  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் பனிக்காலத்தில் தினசரி ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.

<  குளிர்காலங்களில் சைக்கிள், ஸ்கூட்டரில் செல்லும்போது, மார்பில் காற்று பலமாக தாக்கும். இதைத் தவிர்க்க நியூஸ் பேப்பரை நான்காக மடித்து பனியனுக்குள் வைத்து பனியனை "இன்' செய்து சட்டைப் போட்டுக் கொண்டால் மார்புக்கு பலமான பாதுகாப்பு கிடைக்கும். ஸ்வெட்டரை எடுத்துக் கொண்டு அலையவும் வேண்டாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com